இயங்குநிலை தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாகபுத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில்வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டகடற்பரப்புகளில்கடல் அலைகள்2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது(இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).
இக்கடற்பரப்புகள்கொந்தளிப்புமுதல்மிகவும்கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்புமற்றும்காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தைஅண்டியபகுதிகளில்உயர்அலைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
எனவேகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த 24மணித்தியாலங்களுக்கு மீன்பிடி மற்றும்பயண நடவடிக்கைகளில்ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டகடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
- கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மீன்பிடி மற்றும்பயண நடவடிக்கைகளில்ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
- கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும்எதிர்காலமுன்னறிவிப்புகள்தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
