சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்துக்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியுமென, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ளதாக நான் கருதுகின்றேன் எனவும், அவர் தெரிவித்தார். சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்காக இலங்கை மக்களின் ஆதரவை பெறாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாலேயே, இலங்கை புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ளளதாகக் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
