நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் முதலாம் கட்டக் கடன் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, 333 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊடகப் பிரதானிகளுக்குமிடையிலான (23) சந்திப்பின் போதே அதில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்களன்று அனுமதியளித்தது. அதற்கமைய, இக்கடன் திட்டத்தின் முதற்கட்டமாக 333 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் சுமார் 3 பில்லியன் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பரில் எட்டப்பட்டது.
