நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் தற்போது அதிகரித்து வருவதையடுத்து 10 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்தில் 12.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டுக்கு நேரடி முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் நிலவிய கொரோனா சூழ்நிலையினால் சுற்றுலாத் துறையிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையரிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடைந்தமை, கடன் பெறுவதில்லையென்ற தீர்மானம் காரணமாகவும் நாடு பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்
