தென் மேற்கு சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பயங்கர பஸ் விபத்தொன்றில் குறைந்தது 20 உம்றா யாத்திரிகர்கள் கொல்லப்பட்டு மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (27) மாலை பாலம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த இந்த பயணிகள் பஸ், பாதையில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றியுள்ளது. ஆசிர் மாகாணம் மற்றும் அபா நகரை இணைக்கும் வீதி ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதோடு ‘பிரேக்’ செயலிழந்ததை அடுத்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த யாத்திரிகர்கள் உம்றா வழிபாட்டில் ஈடுபடுவதற்காக மாக்கா நகரை நோக்கி செல்லும் வழியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதில் சவூதி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் உயிரிழந்தவர்களில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புனித ரமழான் மாதம் என்பதால் உம்றா வழிபாட்டுக்காக முஸ்லிம்கள் மக்கா நகரை நோக்கி யாத்திரை மேற்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறப்பிடத்தக்கது.
