3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு !

newsinfirst grosary things

#newsinfirst #grosary #hings

இறக்குமதி செய்யப்படும் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பழைய விலை 220 ரூபாவாகும், புதிய விலை 200 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பழைய விலை 340 ரூபாவாகும், புதிய விலை 310 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பழைய விலை 230 ரூபா, புதிய விலை 210 ரூபாவாகும்.

Exit mobile version