இன்றைய தினம் முடங்குமா கொழும்பு..!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (04-04-2023) நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த தீர்மானம் நேற்றைய தினம் (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர்,

பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க, பொதுமக்களின் நலன் கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version