லிட்ரோவை தொடர்ந்து லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைந்தது..!

newsinfirst-Litro-Gas

newsinfirst-Litro-Gas

12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.3,990 ஆகும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version