போலி மருத்துவர் பொரளையில் கைது!

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒருவரை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 70,000 ரூபாவை ஏமாற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யக்வில, பன்னல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Exit mobile version