மரப்படகின் முலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற 119 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு

பங்களாதேஷில் இருந்து மரப்படகின் முலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற 119 ரோஹிங்கியா அகதிகளை பங்களாதேஷ் கடலோர காவல்படை மீட்டுள்ளது.

பங்களாதேஷின் சைன்ட் மார்ட்டின் தீவு அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து இப்படகு மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

உள்ளூர் மீனவர் வழங்கிய தகவலை தொடர்ந்து படகு இருந்த பகுதிக்கு சென்ற கடலோர காவல்படை 58 பேர் பெண்கள், 14 பேர் குழந்தைகள் என 119 பேரை மீட்டுள்ளனர்.

கடந்த மூன்றரை மாத காலத்தில் கடல் வழியாக செல்ல முயன்ற 500 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை பங்களாதேஷ் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version