பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி..!

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலைகளில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கை குறித்து ஓரளவு பாதுகாப்பைப் பெற முடியும் என்பதற்காகவே இவ் வேலைதிட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version