சந்திரயான்-3′ வெற்றியை கொண்டாடிய ‘கூகுள்’

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக நேற்று முன்தினம் (23) தரையிறங்கியது.

இந்நிலையில் இச்சாதனையைக் கொண்டாடும் விதமாக உலகின் முன்னணி தேடுபொறியான ‘கூகுள்’  நேற்றைய தினம்  டூடுல் எனப்படும் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரமொன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த  ‘டூடுல்’ பக்கத்தில் ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முழு பின்னணித்  தகவலையும் இணைத்துள்ளது.

கூகுள் தேடுபொறியானது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், மற்றும் முக்கிய தினங்களின் போது சிறப்பு டூடுலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version