இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல் : இதுவரை 22 பேர் உயிரிழப்பு – 500 பேர் படுகாயம் என்ற Update வெளியானது.

இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும், 35 இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கைப்பற்றியுள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.

போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் ”நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version