காசா நகரத்தை கைப்பற்றவும், தரைவழி படையெடுப்பில் ஹமாஸ் தலைமையை அழிக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதுஎன அறிக்கை வெளியாகி உள்ளது.
காசா நகரத்தின் மீதான உடனடி தரைவழி படையெடுப்பின் மூலம் ஹமாஸ் தலைமையை அழிக்கும் நோக்கத்துடன் மிகப்பெரிய பாலஸ்தீனிய பிறதேசத்தை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா நகரத்தை கைப்பற்றுவதற்கும் அங்கு ஹமாஸ் தலைமையை அழிப்பதற்கும் உத்தரவுகளுடன் எதிர்வரும் நாட்களில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய வீரர்கள் காசாவுக்குள் வருவார்கள், என மூன்று மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.
கைப்பற்றப்பட்டால் காசா நகரத்தை இஸ்ரேல் என்ன செய்ய விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நகரம், ஹமாஸ் அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள இடமாகும்.
காசாவின் எல்லையில் 35 பட்டாலியன்கள் உட்பட இஸ்ரேல் ஒரு பெரிய படையை குவித்துள்ளது 300,000 துருப்புக்களுடன் 100 யுத்த டாங்கிகளும் காணபடுகின்றன.
இந்த வார இறுதியில் இஸ்ரேல் படையெடுப்பைத் தொடங்க திட்டமிட்டிருந்தது ஆனால் இஸ்ரேலிய விமானிகள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்கள் படையினருக்கு விமான ஆதரவை வழங்க முடியாத வகையில் மேகமூட்டமான காலநிலை காரணமாக தாமதமானது என தரைப்படை இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லாயிரக்கணக்கான ஹமாஸ் வீரர்கள் பூமிக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் நம்புகின்றனர்.
நூற்றுக்கணக்கான மைல் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் பதுங்கு குழிகள் காசா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கு அடியில் இருந்தபடி
இஸ்ரேலிய தரைப்படைகள் மேலே முன்னோக்கி அணிவகுத்துச் செல்லும்போது போராளிகள் அந்த சுரங்கங்களில் சிலவற்றை வெடிக்க வாய்ப்புள்ளது என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
