ஆயிரக்கணக்கான அமெரிக்க யூதர்கள் தற்போது அமெரிக்க காங்கிரஸை முற்றுகையிட்டிருக்கின்றனர்.
நூற்றுக் கணக்கானவர்கள் காங்கிரஸின் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
350 பேர் உள்ளே இருப்பதாகவும் இரண்டு யூத மத குருக்கள் பிரார்த்தனை நடத்தி வருவதாகவும் ஜூவிஷ் வொய்ஸ் ஃபோர் பீஸ் அறிவித்துள்ளது.
பலஸ்தீன் மக்களின் மீதான இன அழிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுக்க வேண்டும். அதுவரை நாம் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
