மனைவியைக் கொன்றுவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை

murder

நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்துள்ளார் எனவும், அதன் பின்னர் அவரது வீட்டிற்கு அருகேயுள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

S

Exit mobile version