டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் – அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டு இலங்கையில் இதுவரை 66,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.கண்டி, கொழும்பு, நுகேகொட, கொதட்டுவ, கம்பஹா மற்றும் அத்தனகல்ல பிரதேசங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Exit mobile version