சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் பார்த்து எழுதி மாட்டிக்கொண்ட தென்மாகாண எம்.பி

supreme -court-srilanka-newsinfirst

supreme -court-srilanka-newsinfirst

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி செய்து மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப் கல்லூரி நுழைவுத் தேர்வு கடுமையான தேர்வு நிபந்தனைகளின் கீழ் தேர்வுத் துறையால் நடத்தப்படுகிறது.

இந்த எம்.பி., தேர்வுக்கான விடைகளை பிரதி செய்து எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல்வாதிகளின் பின்னால் சென்று இந்த விசாரணையைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் நாம் வினவிய விசாரனையில் தனக்கும் இது தொடர்பான சில செய்திகள் கிடைக்கின்றன என்றார்.

Exit mobile version