சுகாதாரம் மற்றும் கல்விக் குழுக்களுக்கு புதிய அதிகாரிகள்

சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழு ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்களை அரச சேவை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சுகாதார சேவைகள் குழுவின் தலைவராக டி.எம்.எல்.சி.சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹப்புகொட மற்றும் நிமல் சரணதிஸ்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கல்வி சேவைக் குழுவின் புதிய தலைவராக ஜே.ஏ.ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக எம்.என்.கே.வீரசிங்க மற்றும் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version