பேரூந்து – முச்சக்கர வண்டி விபத்தில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியை திடீரென தெற்கு பக்கம் திருப்ப முற்பட்ட போது பேரூந்து வீதியை விட்டு விலகி கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version