கோப் குழுவில் நேற்று இடம்பெற்ற விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோப் குழு முன் ஆஜரான இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுத்துகாண்டிருந்த போது கோப் குழுவின் தலைவரால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கையால் சைகை காட்டபட்டதாக சுட்டிகாட்டி, இன்று பாராளுமன்றத்தில் எதிர் மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது விளையாட்டு விடயங்களில் அரசியல் தலையீட்டை முற்றாக எதிர்பதாகவும் தெரிவித்தனர்.
