யாழில் தாலிக்கொடியைத் திருடியவர் சிக்கினார்!

யாழ், வட்டுக்கோட்டைப் பகுதியில்  வீடொன்றின் பூட்டை உடைத்து தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண்  நகைகளைத் திருடிய குற்றச் சாட்டில் நபர் ஒருவரைப்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும்  மீட்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version