வளவை கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால், அம்பலாந்தொட்டையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆற்றை அண்மித்த பொலான உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வெல்லவாய – அலிகொட்டியார நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
