தரமற்ற மருந்து தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு..!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய பிரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என மருத்துவ நிருவாகிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக சங்கத்தின் செயலாளர் கலாநிதி பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்வதில் மோசடி இடம்பெற்றுள்ள போதிலும், விசாரணைகள் நடத்தப்படும் விதத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் மருத்துவ நிர்வாகிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version