85 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிய சீனப்பெண் தலைமறைவு..!

கொழும்பு 7 – கறுவாத்தோட்டத்தில் மாணிக்க கல் விற்பனை நிலையத்தில் இருந்த 85 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட,

சீனப்பெண் தலைமறைவாகி உள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தலைமறைவாகி உள்ளவர் குறித்த மாணிக்கக் கல் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சீனப்பெண் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version