பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் 11, 10 மற்றும் 4 வயதில் 3 மகள்களைக் கொண்ட 41 வயதுடைய நபர்,3 மகள்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.
அவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டதனை தொடர்ந்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, 3 குழந்தைகளையும் கொன்ற விவரங்களை அவர் கூறியுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், கடந்த 2021ஆம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
