பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபருக்கு விளக்கமறியல்.

பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் நாவலப்பிட்டி பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரான அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version