கடலில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்..!

எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் இளைஞர் ஒருவர் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் [01] நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

அவர் இரு இளைஞர்களுடன் இணைந்து நீராடச் சென்றிருந்த போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

காணாமற்போன இளைஞனை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் முன்னெடுத்த போதிலும், இது வரையிலும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version