பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய களனி பல்கலை மாணவர்கள் நால்வர் இடைநிறுத்தம்!

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மருத்துவ பீடத்தைத் தவிர்த்து களனிப் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மருத்துவ பீடம் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் இன்று காலை 8.00 மணிக்கு முன்னதாக அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version