அமெரிக்காவில் சூறாவளி புயல் – 6 பேர் பலி..!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை தாக்கிய சூறாவளி புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்ததுடன் மரங்கள், மின் கம்பிகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 85 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டடுள்ளன.

புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

Exit mobile version