பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் (டிசம்பர் 15) நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவினால் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இந்த முன்மொழிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version