கதிர்காம ஆலயத்திற்கு காணிக்கை செலுத்தப்படும் தங்கம் ஆலய பூசகருக்கே சொந்தம் – அதனால் தான் நான் (38 பவுன்) தங்க தட்டை எனக்கு எடுத்துக் கொண்டேன்.

கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது எனவும் அதனால் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க தட்டை எடுத்துக்கொண்டதாகவும் வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகளிடம் அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக காணாமல் போயிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இன்று (27) காலை 7.30 மணியளவில் சரணடைந்தார்.

இதன்போது, சந்தேகநபரான பூசகர் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர், சந்தேகநபரான பூசகர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

Exit mobile version