மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது.
அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில P.. எனவும் பின்பக்கம் (P) என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
