நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு..!

மாரவில – மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (28) அந்தப் பிரதேசத்தில் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான நிசங்சல புஸ்பகுமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

கடலலையில் சிக்கி அடித்துச் சென்றமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதுகடுவ கடலுக்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் நேற்று (27) மாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தாா்.

இந்நிலையிலேயே அவரின் சடலம் இன்று காலை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

Exit mobile version