ஜனவரி 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்..!

ஜனவரி 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் போது
நாடு முழுவதும் தூய்மை பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர,

டெங்கு நோயாளர்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு, டெங்கு இனப்பெருக்கம் அதிகமாக காணப்படும் 70 அதிக ஆபத்துள்ள MOH பகுதிகளில் சிறப்பு தடுப்பு பிரச்சாரம் நடத்தப்படும்,. முப்படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்வதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 88,398நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் , இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 18,650 பேர் இனம்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த வருடம் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version