CEB ஊழியர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் காஞ்சன அதிரடி அறிவிப்பு

kanchana newsinfirst

எந்தவொரு தனிநபரின் ராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபை சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் அவுட்சோர்சிங் கட்டண வசூல் மற்றும் மின்சார சபை சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தனிநபர்களுக்கு எதிராக ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version