சஹாரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில்,
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி திரு. நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இது தொடர்பில் முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சிலர் பயந்துபோய் இந்த குழுவிற்கு ஈஸி கேஷ் மூலம் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
தங்களைக் கைது செய்யப் போவதாகத் தெரிவிக்க காவல்துறை ஒருபோதும் தொலைபேசி அழைப்புகளைச் செய்யாது.
அவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் ஊடகப் பேச்சாளர் கோருகின்றார்.
