இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி இலங்கையில் காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47.

பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த அவர், இங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் இலங்கையில் காலமானார்.

அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை
கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version