அரசாங்கத்திற்கு எதிராக சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சி மாபெரும் கண்டன ஊர்வலத்தை நடத்துகிறது – அனைவருக்கும் அழைப்பு

பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நாளை (ஜனவரி 30) கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த போராட்டம், இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்துவதாக SJB பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version