ஆயுததாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு!

ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியதுடன், மீனவர்கள் ‘Lorenzo Putha 4’ என்ற கப்பலில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் சீஷெல்ஸ் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தலையீட்டை அடுத்து சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய குழுவைச் சேர்ந்த மூவர் சீஷெல்ஸ் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

‘லொரென்சோ புத்தா 4’ கப்பல் தனது முதல் பயணத்தை குறிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு புறப்பட்டது.

சிலாபம் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் அடங்குவதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version