சுதந்திர தினத்தினை முன்னிட்டு திங்களன்று விடுமுறையா?

பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் (05ஆம் திகதி) விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் கேட்ட போது, சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி (திங்கட்கிழமை) விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

Exit mobile version