2023 க.பொ.த. உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதன்மை மதிப்பீட்டாளர்கள் உட்பட புள்ளியிடும் ஊழியர்களுக்கும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே தொகையே மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் என கல்வி அமைச்சு இன்று (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 க.பொ.த. உயர்தர பரீட்சை ஜனவரி 04 முதல் 31 வரை 2,300 க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பரீட்சார்த்திகள் தேர்வுக்கு பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
விண்ணப்பித்தவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்றும், மீதமுள்ள 65 ஆயிரத்து 531 பேர் தனியார் பரீட்சார்த்திகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் I மற்றும் II வினாத்தாள் பரீட்சையை மாணவர்கள் இன்று ( 01) மீண்டும் எதிர்கொள்கின்றனர். குறித்த பரீட்சை வினாத்தாள் கசிந்தமையால் ஜனவரி மாதம் பரீட்சை இரத்து செய்யப்பட்டது.
