ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இலவச மதிய உணவு..!

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களுக்கு இவ்வாறு இலவச மதிய உணவு வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version