நாட்டில் வானிலையில் மாற்றம்!

நாட்டில் இன்றும் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேலும் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version