இசை நிகழ்ச்சி

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமாக பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் யோகி பாபு ,தமன்னா, ஐஷவ்யர ராஜேஷ், ரம்பா போன்ற நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும் தொகுப்பாளினி டிடி, KPY பாலா, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், புகழ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். இதில் தமன்னாவின் நடனமும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் ஹரிஹரனின் பாடல்கள் மனதை தொட்டது.

விசமிகளால் ஏற்பட்ட தடங்கல்
நன்றாக நடந்துகொண்டிருந்த இந்த நிகழ்ச்சி ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் வந்ததுள்ளனர். இதில் விசமிகள் கூட்டத்திற்குள் புகுந்து செய்த சில விஷயங்கள் காரணமாக தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நிகழ்ச்சியை நடத்திய NORTHERN UNI அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் புகுந்த விசமிகள்.. பணத்தை திருப்பி கொடுக்க முன் வந்த NORTHERN UNI.. வெளியிட்ட அறிக்கை | Northern Uni Will Repay The Concert Ticket Amount

இதில் ‘இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்றும் தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

NORTHERN UNI வெளியிட்ட அறிக்கை இதோ..

Exit mobile version