ராஜ்கர்: சுற்றிப் பார்க்கவே 8 நாளாகும் சிவாஜியின் பிரமாண்ட கோட்டையில் என்ன இருக்கிறது?

தனது தலைமையிடத்தை ராய்கர் கோட்டைக்கு மாற்றுவதற்கு முன் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கோட்டையை தனது அரசியல் மையமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

அவர் ராஜ்கர் கோட்டையில் 25 ஆண்டுகளுக்குக் குறையாமல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

“ராஜ்கர் கோட்டையின் உயரத்தைப் பார்த்தால், இது எல்லா கோட்டைகளினும் மிகப் பெரியது எனத் தெரியவரும். இதன் சுற்றளவு 39கி.மீ. அதிகமாக இருக்கும். ராஜ்கர் கோட்டையின் வலிமையையும் உயரத்தையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இந்த மலை, பள்ளத்தாக்குகள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக காற்றைத் தவிர வேறு எதுவும் செல்ல முடியாது. இங்கே மழை மட்டுமே சுதந்திரமாகப் பரவமுடியும்.”

இதைச் சொன்னது முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் தளபதிகளில் ஒருவரான சாகி முஸ்தைத் கான்.

இயற்கையாகவே, சுமார் 40கி.மீ. பரப்பளவில் அமைந்த ராஜ்கர் கோட்டையை முற்றுகையிடுவது எளிதல்ல.

சாகி முஸ்தைத் கான் பாரசீக மொழியில் எழுதிய ‘மசிரே ஆலம்கிரி’யில் ஔரங்கசீப் தெற்கு நோக்கி தனது படைகளை நடத்திச் சென்ற போது தானும் தானும் உடன்சென்றதாகக் குறிப்பிடுகிறார். அப்போது கோட்டைகளை முற்றுகையிட்டதற்கான விளக்கத்தை ஒரு புத்தகத்தில் அவர் எழுதியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

“கோட்டையின் அரண்களை சிவாஜி பலப்படுத்தியிருந்தார். இந்தக் கடற்கரைக்கு கீழே பயங்கரமான பள்ளத்தாக்குகளில், மிகவும் கடினமான பாதைகள் உள்ளன. அவற்றை மக்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது,” என்கிறார் சாகி முஸ்தைத் கான்.

மகாராஷ்டிராவில் உள்ள இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டது சிவாஜியின் பல வியத்தகு செயல்களுக்கு சாட்சியாக உள்ளது. கோட்டையைப் பலப்படுத்தியது மட்டுமின்றி அடிவாரத்திற்கு அருகிலுள்ள காடுகளைப் பராமரித்தது போன்ற உத்திகள் கோட்டையின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது.

முகலாய வரலாற்றாசிரியர் முஹம்மது ஹாஷிம் என்கிற காஃபிகான் 1732-இல் முந்த்காப்-அல்-லபாப்-இ-முஹம்மத்ஷாஹி என்ற புத்தகத்தில் இந்தக் கோட்டையைப் பற்றி விவரித்துள்ளார்.

“ராஜ்கர் கோட்டை உண்மையில் ஒரு மலைத்தொடர். எல்லா பக்கங்களிலிருந்தும் அந்தக் கோட்டையைச் சுற்றி வளைப்பது கடினமாக இருந்தது.”

இந்த விளக்கங்களிலிருந்து, முகலாய ராணுவம் ராஜ்கர் மீது பயந்தது என்பது உறுதியாகிறது.

இன்றும், ஒருவர் ராஜ்கர் கோட்டையை அடைய விரும்பினால், கரடுமுரடான பாதை மற்றும் கடினமான மலையேற்றத்தைத் தவிர வேறு வழியில்லை.

-பிபிசி-

Exit mobile version