பௌத்த மறுமலர்ச்சிக்காகவும் தேசிய சுதந்திரத்திற்காகவும் அளப்பரிய சேவையாற்றிய அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) நிறுவனர் டி.ஆர்.விஜேவர்தனவின் 138வது பிறந்தநாள் நினைவு நிகழ்வு இன்றும் (21) நாளையும் (22) லேக்ஹவுஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ சம்புத்தாலோக விகாரை, கோட்டை மற்றும் ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இன்று இரவு 9.00 மணிக்கு முழு இரவு பிரித் ஓதுதல் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. இரவு முழுவதும் பிரித் ஓதுவதற்காக பிக்குகளை ஏற்றிச் செல்லும் ஊர்வலம் இரவு 8.45 மணிக்கு சம்புத்தலோக விகாரையிலிருந்து புறப்படும்.
ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆகியவற்றில் இந்த பிரித் ஓதுதல் ஒளிபரப்பப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்படும். 25 பிக்குகளுக்கான அன்னதானம் நாளை (22) நண்பகல் லேக்ஹவுஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
