2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 மே 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

——————————————————-

Exit mobile version