ராகம துப்பாக்கிச் சூட்டில் 39 வயது நபர் உயிரிழந்துள்ளார்

ராகம எல்பிட்டிவல பிரதேசத்தில் இன்று அதிகாலை 39 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காலை 07.15 மணியளவில் அப்பகுதியில் உள்ள கடையொன்றிற்குள் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version