அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட உரகஹா மைக்கல் மற்றும் பல பாதாள உலக உறுப்பினர்களை நாடு கடத்துவதற்கு வசதியாக சிஐடி அதிகாரிகள் குழுவொன்றை எதிர்வரும் நாட்களில் டுபாய்க்கு அனுப்பவுள்ளது.
டுபாயில் இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏழு இலங்கை பாதாள உலகப் பிரமுகர்கள் பெப்ரவரி 21ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்தக் குழுவானது சிஐடியுடன் இணைக்கப்பட்ட ASP ஒருவரால் வழிநடத்தப்படும்.
எவ்வாறாயினும், மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக துபாய் பொலிஸார் வியாழன் (22) மாலை வரை இலங்கைக்கு அறிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக டுபாய் பொலிஸாருடனும் இன்டர்போலியுடனும் இலங்கை பொலிஸார் கலந்துரையாடவுள்ளனர்.
